இரு தரப்பு மோதலில் ஒருவர் பலி: இருவர் காயம்

Friday, 10 June 2022 - 6:27

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%3A+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
முல்லைத்தீவு - மல்லாவி,  திருநகர் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைக்கலப்பாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று (9) அதிகாலை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.

கொலை சம்பவம்  தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் காவல்துறையின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மல்லாவி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Exclusive Clips