மொஸ்கோவின் பாதுகாப்புத் தொழிலை இலக்கு வைத்து, வரிகளை உயர்த்தி, அங்கிருந்து தங்க இறக்குமதியைத் தடை செய்வதற்கான ரஷ்யா மீதான புதிய தடைகளை அமுலாக்குவதற்கான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இணங்கப்பட்டதன் பிரகாரம், நேற்றைய தினம் வொஷிங்டனால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, யுக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கான ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கி, பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் நடவடிக்கை மீதான தாக்குதலாகும் அமெரிக்க திறைசேரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு பதிலளிக்கும் வகையில், மேலதிகமான கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க தங்கள் கூட்டணியினர் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமெரிக்க திறைசேரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.