யுக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய ஜனாதிபதி திட்டம்

Thursday, 30 June 2022 - 15:32

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
யுக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றுவதற்கு ரஷ்ய ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ரஷ்ய துருப்பினர் பலவீனமடைந்துள்ள நிலையில், அவர்கள் நீண்ட நாட்கள் தாக்குதல்களை மேற்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ரஷ்ய துருப்பினர் உக்ரைனின் கிவ் நகரின் மீது ஆரம்பத்தில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும், உக்ரைன் தரப்பினரின் பதில் தாக்குதல்கள் காரணமாக ரஷ்ய துருப்பினர் கிவ் நகரத்தை கைப்பற்றும் இலக்கில் பின்னடைவை சந்தித்திருந்தனர்.

இதனையடுத்து டன்பாஸ் நகரை இலக்கு வைத்து ரஷ்ய துருப்பினர் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றும் ரஷ்ய ஜனாதிபதியின் எண்ணத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதுடன், அவர்கள் அந்த இலக்கை விரைவில் அடைவது சாத்தியமில்லை என அமெரிக்க புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.Exclusive Clips