யுக்ரைன் – ஒடேசா நகர தாக்குதலில் இதுவரை 21 பேர் பலி

Saturday, 02 July 2022 - 13:21

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E2%80%93+%E0%AE%92%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+21+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
யுக்ரைனின் ஒடேசா நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 21 பேர் பலியாகினர்.

அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, விடுமுறை விடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒரு குழநிதை உட்பட 5 பேர் பலியாகினர்.

கடந்த சில நாட்களாக யுக்ரைன் மீது ரஷ்யா பல ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் இடம்பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ரஷ்ய க்ரெம்ளின் மாளிகை பேச்சாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Exclusive Clips