அமெரிக்க அணிவகுப்பு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மீது பல குற்றச்சாட்டுகள்

Wednesday, 06 July 2022 - 8:39

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சிகாகோவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மீது ஏழு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த நபர் தமது சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்கலுக்கு உரிய வகையில் தண்டிக்கப்பட வேண்டும் என லேக் மாநில சட்டத்தரணி எரிக் ரைன்ஹாட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகள் முடிவுறுவதற்கு முன்னர், 22 வயதான குறித்த சந்தேக நபர் தொடர்பில் மேலும் பல குற்றங்கள் பதிவுச் செய்யப்படும் என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்தரைத்த போதே இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.

22 வயதான குறித்த சந்தேகநபர், 70 சக்திவாய்ந்த ரவைகள் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கபட்டுள்ள நிலையில் குறித்த சந்தேகநபர் மக்களுடன் மக்களாக தப்பிச் செல்வதற்காக பெண் வேடமிட்டு தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips