கர்ப்பிணி அரச பணியாளர்களை வதிவிடத்துக்கு அருகில் பணிக்கமர்த்துமாறு கோரிக்கை!

Friday, 08 July 2022 - 13:39

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
எரிபொருள் நெருக்கடியால், போக்குவரத்து வசதிகளை வழங்க முடியாத கஷ்ட பிரதேசங்களில் வசிக்கும் கர்ப்பிணி அரச அதிகாரிகளை, வதிவிடங்களுக்கு அருகிலுள்ள சேவை நிலையங்களில் பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கோரியுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை, அதன் தலைவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பொது நிர்வாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் விடுத்துள்ளார்.

குறித்த வழிமுறையிலும் கர்ப்பிணித் தாய்மார்களை சேவைக்கு உள்ளீர்க்க முடியாவிடின், வீட்டிலிருந்து இணையத்தளம் மூலம்  கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பு வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதே நடைமுறையை தனியார் பிரிவிற்கும் அமுல்படுத்துவது குறித்து அவதானம் செலுத்துமாறும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத் தலைவர் சுதர்ஷணி பெர்னாண்டோபுள்ளே கோரியுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips