அரச பணியாளர்களை கடமைக்கு அழைப்பதில் தொடர்ந்தும் மட்டுப்பாடு

Sunday, 24 July 2022 - 15:11

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என பொது நிர்வாகம் மற்றும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சேவைக்கு சமுகமளிக்கும் போது அரசாங்க அதிகாரிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கவனத்தில் கொண்டு நிவாரணம் வழங்குவதற்காக அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயாதுன்னவினால் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

இதனை, தவறாக பயன்படுத்தி கடமைக்கு சமுகமளிக்கக்கூடிய அதிகாரிகள், கடமைக்கு சமுகமளிக்காத நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக எரிபொருள் விநியோகம் மீளமைக்கப்பட்டு வருவதுடன் அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் பொதுப் போக்குவரத்து சேவைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பும்.

இவற்றை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பொது சேவைகள் மற்றும் இணையவழியாக முடியாத கடமைகளை நடத்துவதற்கு தேவையான பணியாளர்களை அழைப்பதை இந்த சுற்றறிக்கை தடுக்காது என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவிக்கிறார்.

No description available.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips