ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 8 பேர் சரீர பிணையில் விடுதலை

Tuesday, 09 August 2022 - 20:16

%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையான இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 8 பேர் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, அருட்தந்தை சக்திவேல், இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சிங்கள நடிகை தமிதா அபேரட்ன, ரதிந்து சேனாரட்ன, ஜகத் மனுவர்ன உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 25ம் திகதி காவல்துறையின் வீதித்தடையை மீறி அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை பேருந்துக்கு தடையேற்படுத்தியமை உள்ளிட்ட காரணங்களால் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், முன்வைக்கப்பட்ட காரணிகளை ஆராய்ந்த நீதவான் திலினி கமகே, அவர்களை சரீர பிணையில் விடுவித்தார்.

அத்துடன் வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதி வரையில் ஒத்திவைத்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips