காபூலில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 23 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

Friday, 30 September 2022 - 22:46

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+23+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 23 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

அத்துடன், 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு பரீட்சையில் தோற்றிய புதுமுக மாணவிகளே, இந்தச் சம்பவத்தில் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை.

இந்த நிலையில், தாலிபான்களின் பேச்சாளர் சபியுல்லா முஜாஹீட் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார்.

கல்வி நிலையங்களை இலக்கு வைத்து தாக்கும் சம்பவங்களை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

அதேபோல ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக தூதரகமும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் கைப்பற்றியதன் பின்னர் பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

உரிமை கோரப்பட்ட 13 பாரிய தாக்குல்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


Exclusive Clips