ஜனாதிபதியை பதவி விலகக்கோரி சீனாவில் தீவிரமடையும் போராட்டம்!

Sunday, 27 November 2022 - 18:44

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
அரசாங்கத்தின் கடுமையான கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக சீனாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

சிலர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது தங்கள் கோபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
ஷாங்காயில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கூடியுள்ளதுடன் ஜனாதிபதி ஸீ ஜிங் பின்னை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினரும் பலரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங் மற்றும் நான்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகங்க மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வடமேற்கு நகரமான உரும்சியில் கட்டடம் ஒன்றில் தீ ஏற்பட்டதில் பத்து பேர் உயிரிழந்தனர்.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளால் குறித்த கட்டடத்திலிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Police officers confront a man amid crowded scenes at a road junction in Shanghai

கொவிட் கட்டுப்பாடுகள் குறித்த இறப்புகளை ஏற்படுத்தியதாக சீன அதிகாரிகள் மறுத்தாலும், உரும்கியில் உள்ள அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை மன்னிப்புக் கோரினர்.

மேலும் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதன் மூலம் 'ஒழுங்கை மீட்டெடுப்பதாக' உறுதியளித்தனர்.

இந்த நிலையில், சீனாவின் மிகப்பெரிய நகரமும், நாட்டின் கிழக்கில் உள்ள உலகளாவிய பொருளாதா மையமுமான ஷாங்காய் நகரில் நேற்று இரவு நடந்த போராட்டத்தின் போது, ஜனாதிபதியையும் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இதன்போது சிலர் வெற்று வெள்ளை பதாகைகளை வைத்திருந்தும் மெழுகுவர்த்திகளை ஏற்றியும் உரும்கியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Protest - Covid-19 curbs: Blank sheets of paper new symbol of protest in  China - Telegraph India

இத்தகைய கோரிக்கைகள் சீனாவிற்குள் ஒரு அசாதாரண நிகழ்வாகும். சீனாவில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நேரடியாக விமர்சித்தால் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாகக்ககூடும்.

சீனாவில் இத்தகைய பாரிய அளவிலான எதிர்ப்பு ஏற்படுவது இதுவே முதல் முறை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்றைய தினமும் உரும்பி, ஷாங்காய் உள்ளிட்ட பல இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


More anti-COVID protests in China triggered by deadly fire | CTV News


Exclusive Clips