சீன மக்களின் போராட்டத்துக்கு கனடா ஆதரவு

Wednesday, 30 November 2022 - 11:12

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
தமது குடிமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் சீனா அனுமதிக்க வேண்டும் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதன் பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் வெளிப்படுத்திய எதிர்ப்புகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஷிஜியான் பகுதியில் உள்ள கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அந்நாட்டில் போராட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

சீன அரசாங்கத்தின் மோசமான கொவிட் கட்டுப்பாடுகளின் காரணமாகவே அவர்கள் உயிரிழந்தள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


Exclusive Clips