பாகிஸ்தானில் மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 51 பேர் பலி!

Wednesday, 01 February 2023 - 8:23

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+51+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள நீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற பாடசாலை மாணவர்களுடன் படகு கவிழ்ந்ததில் 51 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 49 பேர் மாணவர்கள் எனவும் எஞ்சிய இருவர் படகு ஓட்டுநர் மற்றும் ஆசிரியர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்து மாணவர்களும் 7 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியமையினால் படகு கவிழ்ந்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


Exclusive Clips