பாதீட்டை முன்வைத்தார் நிர்மலா சீதாராமன்

Wednesday, 01 February 2023 - 15:01

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பாதீட்டை இன்று பாதீட்டை முன்வைத்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய பாதீடு என்பதால் இதில் பல்வேறு சலுகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நாடாளுமன்ற பாதீட்டுக் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று ஆரம்பமானது.

ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

2023 - 2024ஆம் நிதியாண்டில் 15.43 லட்சம் கோடி இந்திய ரூபா கடன் பெற இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இந்திய தொடருந்து துறைக்கு 2.4 லட்சம் கோடி இந்திய ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






Exclusive Clips