அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பைடனை எதிர்த்து களமிறங்கும் நிக்கி ஹாலே?

Thursday, 02 February 2023 - 13:54

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%3F
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே (Nikki Haley) போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்வரும் 15 ஆம் திகதி அவர் தமது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதை உத்தியோகபூர்வமாக அறிவித்து, பிரசாரத்தையும் ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், நிக்கி ஹாலே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால், குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார்.

தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநராக 2 முறை பதவி வகித்தவரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவருமான 51 வயதான நிக்கி ஹாலே, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார்.

அத்துடன், ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார்.

ஆனால், அண்மைக் காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தமது அண்மைய நேர்காணல்களில், "இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம் என்றும், நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டு வருகின்றார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.






Exclusive Clips