கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியராக ஒருவர் தமது வீட்டில் கசிப்பு விற்பனை செய்துக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 20 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
புலத்சிங்கள - கோவின்ன - பஹால நாரகல பகுதியைச் சேர்ந்த இவர் புலத்சிங்கள மற்றும் மஹரகம வைத்தியசாலைகளில் சிற்றூழியராக சேவையாற்றியதுடன், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிற்றூழியராக சேவையாற்றி வருகின்றார்.
54 வயதுடைய குறித்த நபர் நீண்டகாலமாக கசிப்பு விற்பனை செய்து வருவதுடன், பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் நான்கு பக்கமும் சீசீடிவி கெமராக்கள் பொறுத்தி மிகவும் சூட்சுமமான முறையில் இவர் கசிப்பு விற்பனை செய்து வந்துள்ளார்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கசிப்பு பொதிகளை, சுடுநீர் போத்தலினுள் மறைத்து, வீட்டின் பின்பக்கம் உள்ள பாரிய பீப்பாய் ஒன்றில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
சந்தேகநபரை இன்றைய தினம் மத்துகம நீதிவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.