நீச்சல் தடாகத்திலிருந்து தொழிலதிபர் மீட்கப்பட்ட சம்பம் தொடர்பில் தம்பதியினர் கைது

Sunday, 05 February 2023 - 18:55

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பத்தரமுல்ல - பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து, அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபரின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் கைதாகினர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கந்தானை காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கடவத்தை பகுதியில் வைத்து கைதானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தம்பதியினரான குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 30ஆம் திகதி தமது சகோதரர் வீட்டிற்கு வரவில்லை என குறித்த தொழிலதிபரின் சகோதரியால் வெல்லம்பிட்டிய காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது

அதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினரால், பெலவத்தை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் வர்த்தகரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

49 வயதான வர்த்தகர் இலங்கையில் பிரபலமான ஆடையக தொடரின் உரிமையாளர் ஆவார்.

கடைசியாக அவர் தனது வர்த்தக நிலையத்துக்கு சென்று பெலவத்தை, பகுதியில் உள்ள வீட்டின் திறப்பை தமது மகிழுந்தில் எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் உள்ள சிசிரிவி காணொளிகளை பரிசோதித்ததில், சம்பந்தப்பட்ட வர்த்தகர் மற்றொரு நபருடன் மகிழுந்தில் குறித்த நிர்மாண வீட்டுக்குள் பிரவேசித்தமையும், பின்னர் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியிலுள்ள வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்துக்கு முன்பாக வர்த்தகருக்கு சொந்தமான மகிழுந்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தம்பதிகள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதானவர்களில் 27 வயதான கணவரும் 21 வயதான மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


Exclusive Clips