நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

Sunday, 05 February 2023 - 19:09

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
சுற்றுலா பயணம் சென்று சிலாபம் கடல் பகுதியில் நீராடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 35 வயதான தந்தை, 7 வயதான மகள் மற்றும் 6 வயதான அவர்களின் உறவினரின் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








Exclusive Clips