அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் நாளை கூடுகிறது

Sunday, 05 February 2023 - 20:49

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
அரசியலமைப்பு பேரவை மூன்றாவது முறையாக நாளை கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் நாளை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 25ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் அரசியலமைப்பு பேரவை கூடிய போது, பேரவையின் ஆணைக்குழு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள், அரச சேவை, காவல்துறை, மனித உரிமைகள், கையூட்டல் மற்றும் ஊழல் தடுப்பு, நிதி, எல்லை நிர்ணயம் உள்ளிட்ட ஆணைக்குழு சபைக்கு தகுதிவாய்ந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக செய்திதாள்கள் ஊடாக விண்ணப்பங்களை கோருவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கிடையில், ஆணைக்குழு சபைக்கான உறுப்பினர்களை நியமிக்க செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips