மருதானை போராட்டம்: விசேட விசாரணைகள் ஆரம்பம்!

Sunday, 05 February 2023 - 21:01

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21
மருதானையில் கடந்த வெள்ளிக்கிழமை அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தினத்திலும் நேற்றும், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்ததாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில நாளைய தினம், சம்பவங்களின் பூர்வாங்க அறிக்கை தமக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதிக செலவினத்தில் 75ஆவது சுதந்திர தின விழா நடத்தப்படுவதாக கூறி அமைதி போராட்டம் ஒன்றை சிவில் உரிமை செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஒரு குழுவினர் அங்கு பிரவேசித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு பிரச்சினையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர்; தலையிட்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி அப்புறப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேர் நேற்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips