ஹட்டனில் இருந்து நானுஓயா நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற தொடரூந்து ஒன்று இன்று மாலை தடம்புரண்டுள்ளது.
குறித்த தொடரூந்து ஹட்டன் தொடருந்து நிலையத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்பட்ட நிலையில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையிலான பகுதியில் தடம்புரண்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மலையக தொடரூந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த தொடரூந்தை தடமேற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொடரூந்து திணைக்களம் குறிப்பிட்டது.