மலையக தொழிலாளர் முன்னணியின் சந்தா பணத்தை பெறுவதற்கு மற்றுமொரு தரப்பு முயற்சி - சாடும் இராதாகிருஸ்ணன்

Sunday, 05 February 2023 - 22:49

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+-+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் தலைமையில் செயற்படுகின்ற, ஜக்கிய தொழிலாளர் முன்னணி, மலையக மக்கள் முன்னணியின் கீழ் இயங்கும் மலையக தொழிலாளர் முன்னணியின் சந்தா பணத்தை பெறுவதற்கு முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அது தொடர்பான கோரிக்கையினை பதுளை மாவட்டத்தில் உள்ள சில பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ள நிலையில், அது சட்டவிரோதமானதாகும் என தெரிவித்துள்ளார்.

தமது கட்சி இந்த விடயம் தொடர்பில், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமாரிடம் எமது செய்தி சேவை இது தொடர்பில், வினவியபோது, அதற்கு பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என தெரிவித்தார்.

எனினும் தொழிலாளர்கள் தமது சுய விருப்பின் அடிப்படையில் எந்தவொரு தொழிற்சங்கத்திற்கும் சந்தாப்பணத்தை செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.


Exclusive Clips