டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை மத்திய வங்கியும் அரசாங்கமும் செயற்கையாக வலுப்படுத்துவதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துவது அடிப்படையற்றது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதியானது கேள்வி மற்றும் நிரம்பல் என்பவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வெளிநாட்டு நாணய கையிருப்பில் மத்திய வங்கி இன்னும் பலவீனமான நிலையில் இருந்தாலும், குறைந்தபட்சம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களையாவது கையிருப்பில் வைத்திருக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் நிதியைப் பெற்ற பின்னர் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றார்.
அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு, ரூபா மதிப்பு வலுப்பெறுதல் மற்றும் பொருட்களின் விலை குறைப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாளை நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டத்திற்குப் பிறகு, 4 வருட திட்டத்தை உள்ளடங்கிய, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)முதல் தவணையைப் பெறுவதற்கான விளிம்பில் இலங்கை உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது தெரிவித்தார்.