பிடியாணை ரத்து - இம்ரான் கானின் கட்சியை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க ஆலோசனை

Sunday, 19 March 2023 - 14:37

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88
ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட பிடியாணையை பாகிஸ்தான் நீதிமன்றம் மீளப்பெற்றுள்ளதாக அவரது சட்டத்தரணியை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததாகவும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமருக்கு அறிவுறுத்தியதாகவும் இம்ரான் கானின் சட்டக் குழாமைச் சேர்ந்த சட்டத்தரணி பைசல் ஃபரீத் சவுத்ரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் நேற்று நீதிமன்றில் முன்னிலையானதை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியதன் பின்னர் பிடியாணை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கை பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ளது.

2018 முதல் 2022 வரை அவர் பிரதமராக இருந்த காலத்தில் பெற்ற பரிசுகள் அல்லது அவற்றை விற்ற இலாபம் குறித்து அவர் அறிவிக்கவில்லை என்று தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.

எனினும், கான் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறுகிறார்

தம்மை கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் கவலை வெளியிட்டார். இந்த நடவடிக்கை தன்னை இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், குறித்த வழக்கில் இம்ரானை கானை கைதுசெய்ய காவல்துறையினர், சென்றிருந்தபோது, அவரது ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டதுடன், காவல்துறை வாகனங்கள் தீவைத்தும் எரிக்கப்பட்டன.

இந்தநிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாக நேற்று லாகூரிலிருந்து இஸ்லாமாபாத் வரை இம்ரான் கான் சென்றிருந்தார்.

அதன்போது, நீதிமன்றத்துக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் இருந்தபோது, ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய பஞ்சாப் காவல்துறையினர் லாகூரில் உள்ள அவரது ஜமான் பார்க் இல்லத்தில் ஒரு பெரிய சுற்றிவளைப்பை மேற்கொண்டு, அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.

இதனையடுத்து, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கும் செயல்முறையை தொடங்குவது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சானுல்லா தெரிவித்துள்ளார்.


Exclusive Clips