இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்த ரணிலுக்கு அதிகாரமில்லை - விஜித ஹேரத்

Sunday, 19 March 2023 - 15:12

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 40 ஆவது சரத்தின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு புதிய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 40 சரத்தின் உப பிரிவுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே இரண்டாவது முறையாக போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது என்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வருடம் நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும் என்று கூறிய அவர், அடுத்த ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

எனவே, 2024 ஆம் ஆண்டு நவம்பருக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் கிடைக்கப்பெறும் என்றும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.






Exclusive Clips