நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கம் !

Sunday, 19 March 2023 - 17:20

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%21
நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்க வேண்டாம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்களுக்கான பாதீட்டு ஒதுக்கீடுகளை திறைசேரி செயலாளரும் சட்டமா அதிபரும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில்,கடந்த 3 ஆம் திகதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ஆளும் கட்சியினர் சவாலுக்கு உட்படுத்தியதையடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால உத்தரவின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணை முடியும் வரை இடைக்கால உத்தரவுக்கமைய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கோருகின்றனர்.

இதனை சுட்டிக்காட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி நிக் வினெல் கேசி (Nick Vineall KC) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சுதந்திரமான நீதித்துறை என்பது சட்டத்தின் ஆட்சியின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசுகள் இணங்க வேண்டும் என்ற கொள்கையும் அதுவேயாகும்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களை நாடாளுமன்றக் குழுவின் முன் விசாரிப்பது சரியானதா என்பதை இலங்கையின் நாடாளுமன்றம் 'மிகக் கவனமாக' மறுபரிசீலனை செய்யும் என்பதை தமது சங்கம் நம்புவதாக அவர் கூறினார்.

அதே போன்று நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாததை ஊக்குவிப்பது சரியானதா என்பதையும் இலங்கை அரசாங்கம் மிகக் கவனமாக பரிசீலிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Exclusive Clips