பங்களாதேஸில் பேரூந்து விபத்து: 19 பேர் பலி!

Sunday, 19 March 2023 - 18:53

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+19+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+
பங்களாதேஸின் மதிரிபூர் பகுதியில் இன்று இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் 30க்கும் அதிகமானோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை பங்களாதேஸின் - டாக்கா நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று பத்மா பாலம் பகுதியில், பயணித்த சந்தர்ப்பத்தில், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேரூந்தில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அதனை கண்டறிவதற்கான விசாரணைக்குழு விரைவில் அமைக்கப்படும் என்றும் அங்குள்ள மாவட்ட துணை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.






Exclusive Clips