கொழும்பு - ஹைலெவல் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போட்டியிட்டு உந்துருளிகளை செலுத்திய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் வீதி ஒழுங்குகளை மீறி அதிவேகத்தில் உந்துருளிகளை செலுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
18 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார், பன்னிப்பிட்டிய, கொட்டே உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் பன்னிப்பிட்டி சந்தி முதல் தங்கொட்டுவை சந்தி வரையான பல்வேறு மார்க்கங்களில் உந்துருளிகளை செலுத்தியுள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.