மரண தண்டனை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராயுமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

Wednesday, 22 March 2023 - 17:22

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
தூக்கு தண்டனை கொடூரமானதா என்பது குறித்து விவாதம் நடத்துமாறு மத்திய அரசுக்கு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான வழி ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து தகவல் சேகரிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்ற கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் டி. வை. சந்திரசூட் தலைமையிலான ஆயத்தால் விசாரிக்கப்பட்டது.

அப்போது சிரேஷ்ட சட்டத்தரணி ரிஷி மல்ஹோத்ரா, சட்ட ஆணையத்தின் அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அதில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனையானது மிகவும் கொடூரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து பிரதம நீதியரசர், நாட்டில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை என்பது தூக்கு தண்டனையாகும் இது மிகவும் கொடூரமானதா என்பது தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்றார்.

மேலும் மரண தண்டனையை, குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் உள்ளனவா என்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கவேண்டும்.

இந்த விவரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல்செய்ய சட்டமா அதிபர் ஆர்.வெங்கட்ரமணிக்கு பிரதம நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

தூக்கு தண்டனையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி அதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும். மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு வலியற்ற முறையில் மரணத்தை நிறைவேற்றக் கோரும் விடயத்தில் உயர் நீதிமன்றம் திறந்த மனதுடன் உள்ளது.

தூக்கு தண்டனைக்குப் பதிலாக துப்பாக்கியால் சுடுதல், மரண ஊசி அல்லது மின்சார நாற்காலி போன்றவை குறித்து பரிசீலிக்கலாம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியாது.

எனவேஇ இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம். இந்த விஷயத்தில் நமக்கு போதுமான அறிவியல் தரவுகள் தேவை என்றார்.

இதையடுத்து வழக்கை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips