அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை!

Thursday, 23 March 2023 - 12:23

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+2+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%21
அவமதிப்பு குற்றத்துக்காக இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி கர்நாடகாவின் கோலாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி அவதூறான கருத்து தெரிவித்தமைக்காக ராகுல் காந்திக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

”நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்து திருடர்களின் பெயர்களிலும் மோடி ஏன் இருக்கிறது," என்று பேரணியின் போது காங்கிரஸ் தலைவர் கூறியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தண்டனை அறிவித்த பின்னர் ராகுல் காந்தி, 30 நாட்களுக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி உத்தரவை வழங்கியபோது, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடியின் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips