கொழும்பு - புறநகர் பகுதிகளில் 10 மணிநேர நீர் விநியோகத் தடை!

Thursday, 23 March 2023 - 13:03

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+10+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%21
கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு நாளைமறுதினம்  சனிக்கிழமை (25) பத்து மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த தினத்தில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு, தெஹிவளை - கல்கிசை, கோட்டே, கடுவெல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைகள் மற்றும் கொட்டிகாவத்தை - முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய நகரங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips