பெற்றோல் ஊற்றி, நபர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக, கொழும்பு துறைமுகத்தின் பணி உதவியாளர் ஒருவர் 6 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு துறைமுகம் ஜே.சி.டி. 1ம் மற்றும் 2ம் இலக்க ஓய்வறையில் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி தீப்பரவல் ஏற்பட்டது.
இந்த தீப்பரவலில், களனி கோனவில பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய துறைமுக பணி உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் ஆலோசனையின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும், குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த பெட்ரோல் மாதிரிக்கு நிகரான பெட்ரோல் மாதிரி, இறந்தவர் உறங்கிய படுக்கையறையில் இருந்த சந்தேக நபர் அணிந்திருந்த ஆடையிலும் இருந்ததாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது கொலை என தெரியவந்த நிலையில், குறித்த துறைமுக பணி உதவியாளர் 6 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow US

Most Viewed Stories