ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகுமா?

Friday, 24 March 2023 - 7:53

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இந்திய பிரதமருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இந்திய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புவனேஷ் மோடி என்ற பெயரிலான குஜராத் அமைச்சர் போன்றே, சகல மோடிகளும் திருடர்கள் என ராஹுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தமைக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒருவர் குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசியல் சட்ட நிபுணரான ராகேஷ் திவிவேதி, ராகுல் காந்தியின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்து, தீர்ப்புக்கு தடை விதித்து, பிணை வழங்குகிறபோது தகுதி நீக்கம் செய்யப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் சட்ட நிபுணர் பி.டி.டி. ஆச்சாரி இது குறித்து கருத்து வெளியிடுகையில், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே தகுதி நீக்க காலம் தொடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

தகுதி நீக்கத்தைப் பொறுத்தமட்டில், தண்டனை காலம் மற்றும் தண்டனை காலம் முடிந்து மேலும் 6 ஆண்டுகள் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips