இந்திய ஜனாதிபதியை சந்திக்கவுள்ள அந்நாட்டு எதிர்கட்சியினர்

Friday, 24 March 2023 - 13:46

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
இந்திய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு நீதிமன்றத்தால் நேற்றைய தினம் 2 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று முற்பகல் கலந்துரையாட தீரமானிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்துஇ அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இருந்து டெல்லி விஜய் சௌக் பகுதி வரை பேரணி செல்லவும் பின்னர் ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips