'உலகம் சுற்றும் வாலிபன்' வெளியாகி 50 ஆண்டுகள்!

Friday, 12 May 2023 - 18:31

%27%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%27+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF+50+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மே 11 ஆம் திகதி எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் வெளியானது.

இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த படம் 25 வாரங்கள் வரை திரையிடப்பட்டதாக மறைந்த திரைப்பட வரலாற்றாசிரியர் ரேண்டோர் கை தமது பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

'நாடோடி மன்னன்' படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர் இயக்கிய இரண்டாவது படம் இதுவாகும்.

படத்தில், விஞ்ஞானி முருகன் எம்.ஜி.ஆர் தனது ஆற்றல்-பயன்படுத்தும் சூத்திரத்தை தனது தீய எதிரியான எஸ்.ஏ.அசோகனின் கைகளில் சிக்காமல் இருக்க முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் கருப்பொருளுக்கு ஆதரவாக, பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, ராஜாஜி மற்றும் அண்ணாதுரை ஆகியோர் அறிவியல் பற்றி பேசும் ஆவணக் காட்சிகள் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தன.

எம்.ஜி.ஆர் இந்த திரைப்படத்தில் விஞ்ஞானியாகவும், வில்லனின் பிடியில் இருந்து தனது விஞ்ஞானி சகோதரனை மீட்கும் புலனாய்வு அதிகாரியான அவரது சகோதரர் ராஜூவாகவும் இரட்டை வேடங்களில் நடித்தார்.

இந்தநிலையில் நிஜ வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆருக்கும் அவரது நண்பரான திராவிட முன்னேற்றக்கழகத் தலைவருமான மு. கருணாநிதிக்கும் இடையிலான மோதல் வெளியானது.

இதன்படி 1972 அக்டோபர் 14 அன்று திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார்.

எனினும் எம்.ஜி.ஆர் 1972 அக்டோபர் 18 இல் தனது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை நிறுவினார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips