முதலமைச்சரை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் சிக்கல்!

Tuesday, 16 May 2023 - 21:01

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%21
கர்நாடகாவில் பாரதீய ஜனதாக்கட்சியை தோற்கடித்து ஆட்சியமைக்க தகுதி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் பதவிக்கு யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல்களை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே மாநிலத்தின் கட்சியின் குழுத்தலைவர் டி.கே. சிவக்குமார், மூத்த உறுப்பினர் சித்தாராமையா, ஆகியோருக்கு இடையில் முதலமைச்சருக்கான போட்டி நிலவுகிறது.

இதில் சித்தாராமையாவைக் காட்டிலும் சிவக்குமார் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தநிலையில், இருவரின் ஆதரவாளர்களும் முதலமைச்சர் பதவிக்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக போராட்டங்களும் நடத்தப்படுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல் அமைச்சரான சித்தராமையா டெல்லிக்கு நேற்று மதியம் புறப்பட்டு சென்றார்.

அவரை அடுத்து சிவக்குமாரும் டெல்லி சென்றுள்ளார்.

இதற்கிடையில் தமக்கு முதலமைச்சர் பதவி தரப்படவேண்டும் என்று கோரி, முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரின் ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

எனவே, இந்த மும்முனைப் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸின் தலைமை ஒருவரை கர்நாடக முதலமைச்சராக தெரிவு செய்ய வேண்டும் என்ற நெருக்கடி உருவாகியுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips