கிரேக்க நாடாளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி!

Monday, 22 May 2023 - 9:41

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
கிரேக்கத்தில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த இடதுசாரி கட்சியை தோற்கடித்து, பழமைவாத புதிய ஜனநாயக கட்சி 40.8 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

கிரேக்கத்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, புதிய ஜனநாயக கட்சி நாடாளுமன்றில் 145 ஆசனங்களை கைப்பற்றும் என்று முன்னதாக கணித்திருந்தது.

எனினும் புதிய ஜனநாயக கட்சி குறித்த அறுதிப்பெரும்பான்மையை பெற 6 ஆசனங்கள் குறைவாக உள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இன்றைய தினம் முதல், புதிய ஜனநாயக கட்சி, சிரிசா கட்சி மற்றும் சோசலிச பாசோக் ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், குறித்த கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க முடியாத பட்சத்தில், ஒரு மாதத்திற்கு பின்னர் புதிய தேர்தல் நடத்தப்படும் என கிரேக்கத்தின் ஜனாதிபதி கத்தரினா சகெல்லரொபோயுலொயு தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மூன்று நாட்களுக்குள் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படாத நிலையில், காபந்து அரசாங்கமொன்று அமைக்கப்படும் என கிரேக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips