இலங்கை மருந்து பற்றாக்குறையின் அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
வலி நிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகளுக்கான மருந்துகள் உட்பட 120க்கும் அதிகமான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனை தீர்க்கும் விடயத்தில் அரசாங்கம் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தனியார் மருந்தகங்களில் ஒளடதங்கள் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மருந்துகளுக்கு தீவிர பற்றாக்குறை நிலவுவதுடன் அரசாங்கம் தீவிரமான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
அரசாங்கத்திற்கு மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் செயல்முறைகளும் பல காரணங்களால் தடைப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Follow US






Most Viewed Stories