ஷாபி ஷிஹாப்தீனை மீள சேவையில் இணைக்குமாறு அறிவுறுத்தல்!

Friday, 26 May 2023 - 19:11

%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
ஏப்ரல்21 தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முடிவுறுத்தவும், அவரை குருநாகல் வைத்தியசாலைக்கு மீள சேவையில் இணைக்கவும் அரச சேவைகள் ஆணைக்குழு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பெருமளவிலான பெண்களுக்கு தெரியாமல் கட்டாய கருத்தடை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட விசேட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை மீள அழைக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்திருந்தது.

இந்தநிலையில், சேவையிலிருந்து கட்டாய விடுப்புக் காலத்திற்கான நிலுவைத் தொகைகள், கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் அனைத்தையும் மனுதாரர் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு செலுத்த முடியும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இதன்படி, வைத்தியர் ஷாபிக்கு நிலுவைத் தொகை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.

எனினும், அதற்கான காசோலையை வைத்தியர் ஷாபி பெற்றுக்கொண்டதுடன், நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுகாதார அமைச்சிடம் திருப்பி வழங்க முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips