ஜெரோம் பெர்னாண்டோ நீர்கொழும்புக்கு வருவதை எதிர்பார்த்திருக்கும் முன்னாள் அமைச்சர்!

Friday, 26 May 2023 - 21:44

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%21
தற்போது வெளிநாட்டில் உள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நீர்கொழும்புக்கு வருவதை தாம் எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு வந்தால் தாக்குதல் நடத்துவதற்கு தமது தரப்பினர் காத்திருப்பதாகவும் மேர்வின் சில்வா செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

வெறுப்புணர்வு மற்றும் இனவாதத்தை தூண்டியதற்காக ஜெரோம் போன்றவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

ஜெரோம் அதிகளவில் டொலர்களைப் பெற்று வந்துள்ளார்.

அத்துடன், அவரைப் போன்ற பொது அறிக்கைகளை வெளியிடுபவர்களும் டொலர்களைப் பெறுகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியும் ஜெரோமைப் பின்பற்றுபவர் என்றும், சில அரசியல்வாதிகளும் ஜெரோமை பின்பற்றுபவர்கள் என்றும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச உட்பட சில அரசியல்வாதிகள், மௌனமாக இருப்பதன் மூலம் இது தெளிவாக தெரிவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips