தினேஷ் ஷாஃப்டரின் தாயாரின் மரபணு கோரப்பட்டுள்ளது!

Saturday, 27 May 2023 - 8:26

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%21
ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷரஃப்டரின் உடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு (DNA) கோரப்பட்டுள்ளது.

தாயாரின் இரத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.

அவரது தாயார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் ரத்த மாதிரிகளை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம் தொடர்பான இரண்டாவது பிரேத பரிசோதனை நேற்று (26) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

5 மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சட்ட வைத்திய சபையின் பரிந்துரையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய வழங்கிய உத்தரவின் பிரகாரம் நேற்று (26) தோண்டி எடுக்கப்பட்டது.

உடலம் தோண்டப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய தலைமையில் அவ்விடத்திலேயே வழக்கு ஒன்றும் இடம்பெற்றதுடன், வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips