மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்றிரவு மேற்கொள்ளப்படும்!

Wednesday, 31 May 2023 - 20:09

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%21
மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தம் இன்றிரவு மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 5 மாதங்களில் பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியாக ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவாலும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவாலும் குறைக்கப்பட்டன.

இதற்கமைய, ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 333 ரூபாவிற்கும்;, ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 365 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டன.

லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 310 ரூபாவிற்கும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 330 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips