இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா இன்று (31) நிதி இராஜாங்க அமைச்சர் செஷான் சேமசிங்கவை சந்தித்துள்ளார்.
பொருளாதாரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர், அவருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
அது தொடர்பான திட்டங்களையும் அமைச்சர் பிரஸ்தாபித்துள்ளார்.
இதன்போது, கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா இலங்கைக்காக தொடர்ந்தும் ஒத்துழைப்பு நல்க சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் நாளைய தினம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளார்.
Follow US






Most Viewed Stories