முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உடன்படிக்கை!

Wednesday, 31 May 2023 - 21:13

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக கொரிய தொழில்நுட்ப அபிவிருத்திக்கான நிறுவனத்துடன் மின்சக்தி அமைச்சு இன்று உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிலைபெறுதகு வலு அதிகார சபைக்கு 5.2 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா குளம் மற்றும் ஊவா மாகாணத்தின் கிரிஇப்பன்ஆர குளத்திற்கு அருகாமையில் கொரிய பொறியியல் நிறுவனத்தினால் மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips