மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று நள்ளிரவு (31) 12 மணி முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லிட்டருக்கு ரூ.15 வால் குறைக்கப்படும்.
லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாயாகும்.
லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 இன் விலை 20 ரூபாய்களால் அதிகரிக்கப்படும்.
இதன்படி, இலங்கையின் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் பெற்றோலின் புதிய விலை 385 ரூபாய்களாகும்.
லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் புதிய விலை 340 ரூபாய்களாகும்.
இந்தநிலையில், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 50 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 245 ரூபாயாகும். இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் (Industrial Kerosene) ஒரு லீற்றர் 60 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 270 ரூபாயாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், லங்கா IOC நிறுவனம் CEYPETCO எரிபொருட்களின் விலைக்குறைப்புக்கு ஏற்ற வகையில் தனது விலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில், லங்கா IOC நிறுவனம் CEYPETCO எரிபொருட்களின் விலைக்குறைப்புக்கு ஏற்ற வகையில் தனது விலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

Follow US






Most Viewed Stories