பெருந்தொகை போதைப் பொருளை கடத்தப் பணம் கொடுத்த நபரைத் தேடி வலைவீச்சு!

Wednesday, 31 May 2023 - 23:28

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%21
தெற்கு கடல் பரபரப்பில், 2 ஆயிரத்து 800 மில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகை, கடலில் செலுத்துவதற்காக, அதன் உரிமையாளருக்கு பணம் கொடுத்த நபரைக் கைது செய்ய, காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

ஆடிகம – அரசன்கஸ்வௌ பகுதியைச் சேர்ந்த ருமேஷ் மதுரங்க ஹெட்டியாராச்சி என்ற 28 வயதான குறித்த நபர், தற்போது அந்தப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த நபரின் புகைப்படம், காவல்துறையால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி, தெய்வேந்திர முனையில் இருந்து, 764 கடல் மைல் தொலைவில் வைத்து, படகு ஒன்றில் இருந்து, 111 கிலோகிராம் ஹேரோயினும், 10 கிலோகிராம் ஹஸீஸ் போதைப்பொருளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், குறித்த படகில் பயணித்த 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips