அவுஸ்திரேலிய அடிலெய்டில் அமைந்துள்ள இலங்கையின் பௌத்த விகாரையில், இடம்பெற்ற களவுச் சம்பவம் தொடர்பான பாதுகாப்பு காணொளிகளை அந்த நாட்டின் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பாதுகாப்பு கமரா காணொளியில், உள்ள உண்மை காட்சிகளை காவல்துறையினர் கோரியுள்ளதாக குறித்த விகாரையின் முகாமைத்துவ குழுவைக் கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
களவுச் சம்பவத்தில் ஈடுபட்டவர், ஒரு பாதுகாப்பு கமராவில் மாத்திரமே தோன்றுவதாகவும் ஏனைய கருவிகளில் அவரின் தோற்றம் தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
அடிலெய்டில் உள்ள இலங்கை பௌத்த விகாரையில் கடந்த வெள்ளிக்கிழமை, குறித்த விகாரைக்கு வருகைத்தரும் பகத்தர்களிடம் இருந்து கிடைத்த நன்கொடை பணம் களவாடப்பட்டுள்ளது.
இதன்போது மூவாயிம் அவுஸ்திரேலிய டொலர்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே தெற்கு அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள மற்றுமொரு பௌத்த விஹாரையிலும் சுமார் 800 டொலர்கள் பணம் அண்மையில் களவாடப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US






Most Viewed Stories