ஹிருவுக்கு உயர்விருதுகள்

Friday, 01 February 2013 - 9:09

%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

 

சுகததாச உள்ளக அரங்கில் நேற்று மாலை இடம் பெற்ற சங்தேசய ஊடக விருது வழங்கும் நிகழ்வின் போது பிரதான விருதுகள் ஹிரு தொலைக்காட்சி மற்றும் ஹிரு வானொலி ஆகியனவற்றிற்கு கிடைக்க பெற்றது.
 
இதன்போது, இலங்கையின் வருடத்துக்கான கீர்த்திமிக்க தொலைக்காட்சி சேவைக்கான விருது ஹிரு தொலை காட்சிக்கு கிடைக்க பெற்றது.
 
வருட கீர்த்திமிக்க வானொலி சேவைக்கான விருது ஹிரு எப் எம் வானொலிக்கு கிடைக்க பெற்றது.
 
இதனிடையே, இலங்கையின் சிறந்த செய்தி சேவைக்கான விருதும் ஹிரு செய்தி சேவைக்கு கிடைக்க பெற்றது.
 
சங்தேசய ஊடக விருதானது ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சு மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணக்கீட்டு திணைக்கள கண்காணிப்பின் கீழ் இலங்கையின் ஆனந்த வித்தியாலயம், அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் நடத்திய ஆய்வின் மூலமே வழங்கப்படுகின்றது.
 
9 மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் உயர்தர பாடசாலைகளை மாணவர்களினால் முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
 
இதனையடுத்து, கொழும்பு பல்கலைக்கழக கணக்கீட்டு திணைக்களத்தினால் மதிப்பிப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்படும்.
 
இதற்கமைய, சங்தேசய ஊடக விருதின் பிரதான விருதுகளை ஹிரு தொலைக்காட்சி மற்றும் ஹிரு வானொலி ஆகியன பெற்று கொண்டன.
 
சுகததாச உள்ளக அரங்கில் நேற்று இடம் பெற்ற விருது வழங்கும் நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
இதன்போது இலங்கையின் இந்தவருடத்துக்கான கீர்த்;திமிக்க தொலைக்காட்சி சேவைக்கான விருது ஹிரு தொலை காட்சிக்கு வழங்கப்பட்டது.
 

[MP3]t52517_1[/MP3]

 
இலங்கையின் வருடத்துக்கான கீர்த்திமிக்க வானொலி சேவைக்கான விருது ஹிரு வானொலிக்கு கிடைக்க பெற்றது.

[MP3]t52517_2[/MP3]

சங்தேசய ஊடக விருது வழங்கும் நிகழ்வின் போது சிறந்த செய்தி சேவைக்கான விருது ஹிருவிற்கு கிடைக்க பெற்றது.
 
 

[MP3]t52517_3[/MP3]

[FLV]52513[/FLV]