இந்திய அமெரிக்க உறவு

Friday, 08 February 2013 - 14:47

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவை பலப்படுத்துவதில் தாம் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின், புதிய வெளியுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஜான் கெர்ரி, தொலைபேசி வாயிலாக உலகத் தலைவர்களிடம் உரையாடிவருகின்றார்.

ஐக்கிய நாடுகளின் பொது செயலர், பான் கி-மூன், நேட்டோ பொது செயலர் உள்ளிட்டோருடன் அவர் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளார்.

அந்தவகையில் நேற்றைய தினம் அவர் இந்திய வெளியுறவு துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்துடன் உரையாடியுள்ளார்.

இதன்போது அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும், இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், உலகளாவிய பிரச்னைகளில், இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் சல்மான் குர்ஷித்திடம், ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்துவதில், இரு அமைச்சர்களும் உறுதியுடன் இருப்பதாகவும், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் உதவிகளுக்காக, ஜான் கெர்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், விக்டோரியா நுலாண்ட் உறுதி செய்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips