பங்களாதேஷில் படகு விபத்து

Friday, 08 February 2013 - 18:11

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு அருகாமையில் உள்ள ஆற்றில் படகு ஒன்று மூழ்கியுள்ளது.

விபத்து இடம் பெற்ற போது, 100க்கும் மேற்பட்டவர்கள் படகில் பயணித்ததாக அனுமானிக்கப்பட்ட போதிலும் துல்லியமான எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

டாக்காவில் இருந்து சண்பூர் மாவட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த படகு முனசி கன்ஜ் என்ற பிரதேசத்தில் வைத்து நீரில் மூழ்கியது.

பங்களாதேஷ் படகு விபத்துக்கள் இடம் பெறுவது சாதாரணமான சம்பவமாக கருதப்படுகி;ன்றது.

படகுவிபத்துக்களின் போது, வருடாந்தரம் காவுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பலான விபத்துக்கள், குறிப்பிட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதாலேயே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர், படகுகளின் பராமரிப்பு குறைந்த ம்ட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் இடம் பெற்ற படகு விபத்தொன்றில் 112 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடதக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips