போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு கண்டனம்

Friday, 08 March 2013 - 9:05

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைத்துள்ளோரின் உறவினர்களால் கொழும்பில் நடாத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடை ஏற்படுத்தியமைக்கு திராவிட முன்னேற்ற கழகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து 10 பேருந்துக்கள் மூலம் குறித்த மக்கள் கொழும்பிற்கு செல்ல தயாராகவிருந்தனர்.

எனினும், இறுதி நேரத்தில் அதற்கான தடை ஏற்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்தை மீறும் செயல் என முத்துவேல் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போன மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை கண்டு பிடித்து தருமாறு கோரும் மக்களுக்கு சுதந்திரமாக தங்களது செயற்பாடுகளை முன் எடுக்கவேணும் அனுமதி வேண்டும் என திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips